இணைதளத்தை தமிழில் தேட உதவும் கருவி

Saturday, July 28, 2007

ஜாதிகள் தொடர்வது என்? -ஓர் பார்வை

இடஒதிக்கீடு என்பது மாதிரியான பிரச்சினைகளுக்கு போகாமல், தனி மனித அடிப்படையில், ஜாதிககள் தொடர்வது எதனால் என்று அலசும் கட்டுரை (?!) இது. ஏன் கட்டுரை என்று கூட சொல்ல முடியாது, ஓர் எண்ண பகிர்வு என்று தான் சொல்ல வேண்டும்.

இன்றைய இளய தலை முறையில் நிறைய பேர் அவர்கள் என்ன ஜாதி என்று தெரியாமல் வளர்கிறார்கள். இது ஓர் மிகவும் ஆரோகியமான விஷயம் தான். குலத்தொழில்களை விட்டொழிந்து பல நாட்கள் ஆகின்றது. யோசித்து பார்த்தால் பள்ளியிலும், கல்லூரியிலும், பணியிடங்களிலும், நண்பர்களை தேர்ந்து எதுக்கும் போது யாரும் அவர்கள் ஜாதி பார்த்து தேர்ந்து எடுப்பதில்லை. (பொதுவாக) ஏன் பக்கது வீட்டார் என்ன ஜாதி என்று பார்த்தா நாம் பழகுகிறோம்? பின் ஏன் தான் ஜாதி என்ற வழக்கம் தொடர்கிறது?

நான் நிர்ணயித்திருக்கும் இரண்டு காரணங்கள்: ஒன்று திருமணம், மற்றொன்று அத்தனைச்சார்ந்த பந்தங்கள். இவை இரண்டுமே ஒன்றுடனொன்று பிரிக்க முடியாமல் கலந்தவை. சரி, விளக்கமாக பார்ப்போம். இன்றைய தலைமுறையினர் (நான் உட்பட) என்ன தான் பல வெளியிடங்களுக்கு சென்று பணி புரிந்தாலும், திருமணம் என்று வரும் போது பெற்றோரிடம் விட்டு விடுகின்றனர். சௌகரியம் ஒரு காரணமாக இருக்கலாம். பணி அழுத்தம் அதிகமாக இருப்பதால் திருமணம், வாழ்க்கை துணையை தேர்ந்து எடுப்பத்திற்கு போதிய நேரம் இல்லாமல் இருக்கலாம். நல்ல துணை கிடைக்க பெறுவது ஒன்றும் சாதாரணமான காரியம் அல்லவே.

சரி அப்படி பெற்றோரிடம் விட்டு விட்ட பின், அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களுடய உறவினர்களிடமிருந்து முதலில் தேட ஆரம்பிக்கிறார்கள். இந்தியாவில் அதுவும் குறிப்பாக தென் இந்தியாவில், இன்னமும் குடும்ப பந்தங்கள் தான் ஒருவருடைய குணததித்திற்கு சன்றிதல் வழங்க முடிகிறது. விழாக்கள், திருமணங்கள், துக்கதினங்கள், தொழில் இவை எல்லாவற்றிலும் குடும்ப பந்தங்களின் பங்கேற்பு இருப்பது மறுக்க முடியாதது. இப்படி பல சமயங்களில் ஒருவரை உன்னிப்பாக பார்க்க நெரிடுவதால், அவர்களால் குணச்சான்றிதல் வழங்க முடிகிறது. ஆகையால் இவர்கள் தம்மை சேர்ந்தவர்களை பரிந்துறை செய்வது இயல்பே. எவர்கள் பரிந்துறை செய்கிறவர்கள் இவர்களுடைய ஜாதியாக தானே இருக்க முடியும்?

No comments: