இணைதளத்தை தமிழில் தேட உதவும் கருவி

Saturday, July 28, 2007

இழப்பு

என்னை நீண்ட நாட்களாக குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது. ஒரு மனிதன் அவனது சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனது அடிப்படை குணங்களை மாற்ற நேர்ந்தால், அது அவனுக்கு இழப்பு ஆகுமா? பகவத் கீதை கூறுவது போல், 'எந்த குணத்தை கொண்டு வந்தான் அதை இழப்பதற்கு? எது அவனது குணமாக இருந்ததோ அது இங்கிருந்து தான் உருவாக்க பட்டது, எது இப்பொழுது அவன் குணமாக மாறி விட்டதோ அதுவும் இங்கிருந்த தான் உருவாக்கப்பட்டது. ஆகையால் அவனுக்கு இழப்பு ஏற்பட வில்லையோ?.
இந்த கேள்வி என் மனதில் எப்படி உதித்தது? சொல்கிறேன். எனது ஓர் அடிப்படை குணம், உதவி கேட்டு வரும் நண்பர்களிடம் 'இல்லை' என்று சொல்ல முடியாதது. இதை ஓர் பெரிய தவறு என்று கூறி விட முடியாது தான். ஆனால் இதனால் ஏற்படும் பின்விளைவகளை பார்ப்போம்.
முதலில், நான் என் அநுபவத்தில் பார்த்தது, நான் யாராவது கஷ்டப்படும்போது உதவ நேர்ந்தால், அவர்கள் மறுபடியும் கஷ்டப்படும் போது முதலில் நினைவுக்கு வருவது நான் தான். இதனால் வரும் சங்கடஙகளை நான் மேலும் விளக்க வேண்டியது இல்லை.
இரண்டாவது, நான் என்னிடம் இதவிக்கு வரும் நண்பர்களுக்கு சிரத்தை எடுத்து கொண்டு என்னால் முடிந்தவரை உதவி செய்வேன். நான் உதவி செய்யும் போது பிரதிபலன் பார்ப்பது இல்லை தான். ஆனால் நான் எனக்கு ஒரு காரியம் என்று போகும் போது நண்பர்கள் அதே சிரத்தை எடுக்காத போது மனம் நோகாமல் இருப்பதில்லை.
மூன்றாவது, நான் உதவ மிகுந்த சிரத்தை எதுக்கும் போது, எனது முக்கியமான வேறு பணிகள் பதிக்க படுகின்றன. ஆகையால் எனது 'இல்லை' என்று சில சமயங்களில் கூற கூடிய ஆளுமையை வளர்க்க ஆசை படுகிறேன். இது என் குணத்திற்கு இழப்பா இல்லையா?

No comments: